ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி நாட்டிய தாரகை ரங்கா விவேகானந்தன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2025 (சனிக்கிழமை)
குச்சுப்புடி நாட்டியக் கலை உலகில் தனித்துவம் பெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கலைவாணி ரங்கா விவேகானந்தன் நேற்று காலமானார். கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரியான இவர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தென் அமெரிக்க நாடுகளில் நாட்டியக் கலையை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
நினைவு குறிப்பு – குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன்
குச்சுப்புடி நாட்டியக் கலை உலகில் தனித்துவம் பெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கலைவாணி ரங்கா விவேகானந்தன் இன்று காலமானார் என்ற செய்தி பலரிடையே சோகமூட்டியுள்ளது.
கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரியாகப் பிறந்த ரங்கா, எட்டு வயதில் கலைப்பயணத்தைத் தொடங்கி, யாழ்ப்பாணத்தில் கீதாஞ்சலி கே. நல்லையா அவர்களிடம் பரதநாட்டியம் கற்று, தென்னிந்தியாவில் கலைப் பயணத்தை விரிவாக்கினார்.
பரதம் மட்டுமின்றி கதகளி, மோகினியாட்டம் ஆகிய கலைவகைகளையும் கற்றுத்தேர்ந்த இவர், குச்சுப்புடி நடனத்தை அதன் மேதை வேம்பட்டி சின்ன சத்யத்திடம் முற்றிலும் ஆழமாகக் கற்றார்.
இந்தியாவிலும் , இலங்கையிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ்ர்களை உருவாக்கினர் , தமிழ் நாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவுக்கு அவர் நடிகையாக இருக்கும் போது குச்சுப்பிடி நாட்டியம் கற்றுக்கொடுத்தவர் நாட்டிய விசாரத் பட்டம் பெற்று, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சிகளை நடத்தி, பிரித்தானிய ராணி எலிசபெத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனிடம் கலை விருதுகளும் பெற்றார்.
இந்து சமயக் கதைகளை நாட்டியநாடக வடிவில் குச்சுப்புடி மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தி, பல உலகளாவிய நாட்டிய விழாக்களில் இந்திய கலையை பறைசாற்றியவர். ஜேர்மன் தூதரக அதிகாரியை திருமணம் செய்துஜெர்மனியில் வாழ்ந்தவர் பின்னர் ஆர்ஜென்டினாவில் சென்று 'ஆனந்தராஜம்' என்ற இந்திய நாட்டியப்பள்ளியை நிறுவி, அந்த நாட்டின் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் கலைபயிற்சி அளித்து ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கினார். அவருடைய மாணவர்கள் இன்று ஸ்பானிஷ் மொழியில் YouTube காணொளிகளின் மூலம் அவருக்கு அஞ்சலிகள் செலுத்தி வருகின்றனர்.
தொழில்முறை மேற்கத்திய 'பாலே' கலைஞர்களுக்குப் பயிற்சிப்பட்டறைகள் வழங்கவும், இந்திய நாட்டியக்கலையை உலகளவில் பிரநிதிக்கவும் ரங்கா அழைக்கப்பட்டார். இத்தாலி, ஜெர்மனி, குறோசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு, கலையை எல்லை தாண்டிய சக்தியாகச் சாதித்து வந்தார். பல இனங்களை ஒன்றிணைக்கும் இந்தக் கலைப்பணியில் அவர் இடைவேளையின்றி தொடர்ந்து ஈடுபட்டார். கனடா, இலங்கை, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவரிடம் பயின்று அரங்கேறியவர்கள், அவரது பாரம்பரியத்தை இன்று தொடர்ந்தும் பரப்பி வருகின்றனர்.'மிகுந்த அழகுடன் காந்தம் போல பார்வையாளர்களைக் கவரும் அவரது நடன பாணி' என்ற லண்டன் ரைம்ஸின் பாராட்டுகள் இன்றும் நம் நினைவில் உள்ளது.
மிகுந்த தியாகம், பற்றுதல், பரந்த கலைக்காணொளிகள், உலகளாவிய மாணவர்கள் என முழுமையான நாட்டியவாழ்க்கையை மேற்கொண்ட ரங்கா விவேகானந்தன், யாழ் மண்ணின் பெருமை என்றும் நினைவுகளின் நட்சத்திரமாக இருக்கப்போகிறார்.
அஜெண்டினா மாணவி ஒருவர் தனது அஞ்சலியை இவ்வாறு பதிவு செய்துள்ளார் " இந்தியா நாட்டின் பாரம்பரியமான இந்திய ஆடல்கலையை அர்ஜென்டினாவில் வாசல் திறந்த மகானுபாவி குரு ரங்க விவேகானந்தனுக்கு எங்கள் மரியாதை. இவரால் பலரின் வாழ்க்கையில் புதியதொரு காலத்தை உருவாக்கிய பெருமை நிலைத்துள்ளது..இன்று அந்த வழி தொடரும் பல பாடசாலைகள் மற்றும் நடனமணிகள் மூலம் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியம் வெளிப்படுகிறது." .
இன்னுயிர் எங்கும் மகிழ்வாய் கலையாய் பரவ விரும்புகிறோம்…
ஓம் சாந்தி!அவரது இறுதிச்சடங்குகள் ஆஜெண்டினாவில் நடைபெறும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.