மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "உரிமைப்பந்தம்" போராட்டமானது இன்று பிற்பகல் 4.30 மணியளவில் செம்மணிச் சந்தியில் உள்ள அணையா விளக்குத் திடலில் இடம்பெற்றது
அதன் போது, அணையாவிளக்கு தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 412 என்புத் தொகுதிகளையும் , 1999 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, அகழ்ந்து எடுக்கப்பட்ட 15 என்புத் தொகுதிகளும் என மொத்தமாக 427 என்புத் தொகுதிகளை நினைவுறுத்தி , 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.