வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த அலங்கார உற்சவம் வரும் 20.07.2026 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த அலங்கார உற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 28.07.2026 அன்றும், அதனைத் தொடர்ந்து 29.07.2026 புதன்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
ஆதிகோவில் ஆதி வைரவர் கோயிலானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியிலிருந்து வடக்குத் திசையில் கடற்கரையில் அமைந்துள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த அலங்கார உற்சவம் சம்பந்தமாக ஆலய பரிபாலன சபை வெளியீட்டுள்ள விஞ்ஞாபனம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.