கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டியில் சிதம்பரக் கல்லூரி அணிகள் தேசிய மட்டத்துக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2026 (சனிக்கிழமை)
கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டியில் யா /சிதம்பரக் கல்லூரி அணிகள் தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
மேற்படி போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாகாண மட்ட கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டியில் (Beach volleyball) 20 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சிதம்பரக் கல்லூரி அணி மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றதுடன் 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் சிதம்பரக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.