முன்னாள் பிரபல கப்பற்துறை முகவர் மணிவாசகர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2026 (சனிக்கிழமை)
முன்னாள் பிரபல கப்பற்துறை முகவர் திரு. தாமோதரம்பிள்ளை மணிவாசகர் இன்று வல்வையில் காலமானார். இவருக்கு வயது 86.
வல்வையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 70 களின் ஆரம்பத்தில் சிங்கபூருக்கு குடிபெயர்ந்திருந்து, தொடந்து மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வசித்து வந்தார்.
இவர் 1970 களில் தொடங்கி 1990 இன் நடுப் பகுதி வரை ஏராளமான தமிழ் இளைஞர்களுக்கு குறிப்பாக வல்வை இளைஞர்களுக்கு கப்பல்களில் பலவேறு தர தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். தொடர்ந்தும் வல்வையில் சில வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முயன்றிருந்தார்.
இவரின் சேவையைப் பாராட்டி கடந்த 15.09.2015 ஆம் ஆண்டு வல்வையில் இவருக்கு மாபெரும் கெளரவிப்பு வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உண்டு. இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் வல்வையில் இடம்பெறவுள்ளது.
கீழே படத்தில் கடந்த 15.09.2015 அன்று திரு மணிவாசகர் அவர்கள் வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தால் கெள ரவிக்கப்பட்டபோது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.