சொந்த நிலங்களை மீட்கக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2026 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்து உடனடி மீள்குடியேற்றத்தை உறுதி செய்யக் கோரி இன்று (15) பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட வலி. வடக்கு மக்களின் இடம்பெயர்வு 36 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பும், பலாலி சந்திக்கு அண்மையிலும் நடைபெற்ற போராட்டங்களில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் கலந்து கொண்டனர்.
“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “36 ஆண்டுகள் அகதி வாழ்க்கை போதும்” போன்ற கோஷங்களை எழுப்பிய மக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மாவட்ட செயலரிடம் கையளித்தனர்.
மீதமுள்ள அனைத்து காணிகளும் முழுமையாக விடுவிக்கப்படும் வரை அகிம்சை வழி போராட்டங்கள் தொடரும் என வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.