உலக அமைதி குறியீட்டில் தெற்காசியாவில் இலங்கை 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2026 (வியாழக்கிழமை)
2026 ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டில் (Global Peace Index) இலங்கை 67வது இடத்தைப் பெற்றுள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (Institute for Economics and Peace) வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், தெற்காசிய நாடுகளில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இலங்கை இடம்பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 97வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் 67வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அமைதி மதிப்பெண் 1.91 ஆக பதிவாகியுள்ளது.
உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் பூட்டான் 16வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக அமைதி குறியீடு தனிநபர் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், இராணுவமயமாக்கல், அரசியல் நிலைத்தன்மை, குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
அதேவேளை, 2026 அறிக்கையின்படி தெற்காசியா பிராந்தியம் அமைதித் தரத்தில் 2.3 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய பதற்றங்களே இதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.