அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவில்தலும் - அமரர் சடாட்சரசுந்தரம் குகநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவில்தலும் - அமரர் சடாட்சரசுந்தரம் குகநாதன்
தோற்றம் - 26.04.1949 மறைவு - 20.02.2026
வல்வெட்டித்துறை பழைய ஆஸ்பத்திரி வீதியை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாக் கொண்ட எமது குடும்பத்தலைவர் அமரர் சடாட்சரசுந்தரம்.குகநாதன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து நேரிலும்,தொலைபேசியிலும், சமூகவலைத்தளங்களினூடாக அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் ,அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியவர்களுக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன்,
எதிர்வரும் 22/03/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது இல்லத்தில் அந்தியேட்டிக்கிரியைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து ஆத்மசாந்திப்பிராத்தனைகளுடன் மதிய போசன நிகழ்வு மதியம் 1.00 மணி முதல் 4.00 வரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்.
Tooting and Mitcham Community Sports Club,
Imperial Fields
Bishopford Road, Morden, SM4 6BF
இதனையே எமது அழைப்பாக ஏற்று அன்புள்ளங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.