வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி, கொத்தியாலையைப் பிறப்பிடமாகவும், கல்ரோட் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சாமி நாராயணசாமி இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு செல்லச்சாமி நாராயணசாமி (செல்லக்கிளி)
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி, கொத்தியாலையைப் பிறப்பிடமாகவும், கல்ரோட் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சாமி நாராயணசாமி இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் செல்வச்சாமி பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும் நடராசா சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும் தாமரைச்செல்வி (செல்வி) இன் பாசமிகு கணவரும் ஆவார்.
ஜெயகௌரி, சகுந்தலா, தர்மராசா, ரூபா, காலஞ்சென்ற சிவானந்தராசா, இராஜலட்சுமி காலஞ்சென்ற நந்தினி, ஞானவதி, நந்தகுமார், செல்வகுமார் ஆகியோரின் மைத்துனரும் நவரத்தினம், சிவனேசன், பாலச்சந்திரன், ரஞ்சிதா, தயாநிதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அவரது இறுதி கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது பூத உடல் தகனக்கிரியைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை மாலை 05 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.