பாரிய நிலத்தடி நீர் ஊற்று பிட்டபெத்தரயில் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2026 (வெள்ளிக்கிழமை)
இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை - பிட்டபெத்தர (Pitabeddara) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (The National Water Supply and Drainage Board - NWSDB) தெரிவித்துள்ளது.
பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தேசிய நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்ட குழாய் கிணறு தோண்டும் பணியின் போதே இந்த பாரிய நீர் ஊற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நீர் ஊற்றிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் (10 கன மீட்டர்) நீர் தொடர்ச்சியாக வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் மன்னார் - மடு பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாக கருதப்பட்டது. அங்கிருந்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றர் நீர் பெறப்பட்டிருந்தது.
பாறைகளை ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை இனங்கண்டு இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.